இன்று வெளியாகிறது ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ..!
 

 
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மேக்கிங் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி வரிசைப் படங்களுக்கு பிறகு ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். தெலுங்கு, தமிழில் நேரடியாக தயாராகி வரும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் நடித்துள்ளார். மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா, ராஜீவ் கனகலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறக் கிடக்கிறது.


தொடர்ந்து ரசிகரின் தக்கவைக்கும் நோக்கில் படம் வெளியாகும் வரை, தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்டுகளை அவ்வப்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகிறது.

இதை ட்விட்டரில் உறுதி செய்யும் விதமாக் ஆர்.ஆர்.ஆர் மேக்கிங் வீடியோ காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தி உட்பட மொத்தம் 5 மொழிகளில் தயாராகும் இப்படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web