மீண்டும் தள்ளிப்போகும் ‘ஆர்.ஆர்.ஆர்’ பட ரிலீஸ்..!

 
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்
ராஜமவுலி இயக்கத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக தயாராகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தாமதமாகும் என்கிற செய்தி தற்போது கிடைத்துள்ளது.

பாகுபலிக்கு பிறகு ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்த படம் வரும் அக்டோபர் 13-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதுவரை 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன, 10 சதவீத பணிகள் மட்டுமே பாக்கியுள்ளன. அதற்கான ஷூட்டிங் பணிகள் தற்போது உக்ரைன் நாட்டில் நடந்து வருகின்றன. இதில் ராம் சரண், என்.டி.ஆர் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

குறைந்தளவிலான காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்றாலும், தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு தாமதமாகும் என கூறப்படுகின்றன. அதனால் ஆர்.ஆர்.ஆர் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

From Around the web