பொங்கல் நாளில் நேரடியாக மோதும் ஆர்.ஆர்.ஆர் - ராதே ஷ்யாம்..!
Nov 2, 2021, 06:35 IST
தெலுங்கு சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகுபலி வரிசைப் படங்களை தொடர்ந்து எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என முன்னமே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் அதேநாளில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷ்யாம்’ படமும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விரண்டு படங்களும் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாவதால் வசூல் பாதிக்கப்படும் என்கிற ஐயப்பாடு எழுந்துள்ளது.
 - cini express.jpg)