ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் வாடிவாசல்..?

 
வெற்றிமாறன் மற்றும் சூர்யா

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசம் படம் தொடர்பான புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.

எழுத்தாளர் சி.சு. செல்லப்பா என்பவர் எழுதிய ‘வாடிவாசல்’ என்கிற நாவலை தழுவி உருவாகும் படம் தான் வாடிவாசல். இதை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். வெற்றிமாறன் இயக்குகிறார். ஏறுதழுவலை மையப்படுத்திய படமாக இது உருவாகிறது.

இந்த படம் ஒரு பின்கதை இடம்பெறுகிறது. அதற்கான பட்ஜெட் ரூ. 200 கோடி வரை செல்லக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு மற்ற கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

வெற்றிமாறன் தற்போது சூரி, பவானி இருவரும் நடித்து வரும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படமும் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.
 

From Around the web