ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம்.. நடிகை விந்தியா குறித்து பிரபல பத்திரிகையாளர்..!

 
1

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ’சங்கமம்’ என்ற திரைப்படத்தில் நாயகி ஆக அறிமுகமானார்  நடிகை விந்தியா.அதன் பிறகு ’திருநெல்வேலி’ ’உயிரிலே கலந்தது’ ’விஸ்வநாதன் ராமமூர்த்தி’ ’சார்லி சாப்ளின்’ அஜித் நடித்த ‘ரெட்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த விந்தியா, அதிமுகவின் பிரச்சார பீரங்கியாகவே மாறினார். குறிப்பாக திமுகவை அவர் தனது பேச்சில் வறுத்தெடுத்தது வருகிறார்.தற்போது கூட அவர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை விந்தியா கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகை பானுப்பிரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு நான்கே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து விட்டார். இதனை அடுத்து அவர் முழுக்க முழுக்க அரசியல் கவனம் செலுத்தி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஒரு நாளுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

நட்சத்திர பேச்சாளர்களுக்கு இதைவிட குறைவாக சம்பளம் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை விந்தியாவுக்கு செம வருமானம் என்று கட்சியினர் கூறி வருகின்றனர்.

From Around the web