ரூ. 200 கோடி செலவில் தயாராகும் பாகுபலி ..!

 
ரம்யா கிருஷ்ணன் மற்றும் வாமிகா கபி

பாகுபலி படத்தில் இடம்பெற்ற சிவகாமி கதாபாத்திரத்தின் முன்கதையை மையமாக வைத்து உருவாகும் சரித்திர வடிவில் உருவாகும் வலை தொடர் விரைவில் உருவாக்கப்படவுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஓ.டி.டி தளமாக இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் பெரும் முதலீட்டில் பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்களை தயாரித்து வருகிறது. அதில் பாகுபலி கதையை மையமாக வைத்து உருவாகும் தொடர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இது ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமக வைத்து இந்த தொடர் உருவாக்கப்படவுள்ளது. முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தயாரிப்பு நிர்வாகம் சமந்தாவை அணுகியது.

ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து இளம் வயது சிவகாமியாக வாமிகா கபி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web