துப்பாக்கி முனையில் கொள்ளையனிடம் ரூ. 7 லட்சம் பறிகொடுத்த பிரபல நடிகை..!

 
நிகிதா ராவல்

பிரபல நடிகையிடம் துப்பாக்கி காண்பித்து மிரட்டி ரூ. 7 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் நிகிதா ராவல், டெல்லியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது ஷூட்டிங் முடித்துவிட்டு சாஸ்திரி நகருக்கு அவர் திரும்பிய போது, அங்கு வந்த மூகமுடி கொள்ளையர்கள் அவரை வழிமறித்தனர்.

கையில் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டு ரூ. 7 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டார். இதனால் பயந்துபோன நடிகை கையில் இருந்த பொருட்கள் மற்றும் பணத்தை கொடுத்துவிட்டு ஒளிந்துகொண்டுள்ளார்.

அதை தொடர்ந்து உறவினர் உதவியுடன் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். உயிரை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. அதனாலேயே இப்படி செய்தேன். எனக்கு என்னுடைய நகைகள் மற்றும் பணத்தை போலிசார் மீடுத்தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

From Around the web