ரூ. 1000 கோடியில் 10 படங்களை களமிறக்கும் மெகா பட்ஜெட் நிறுவனங்கள்..!

 
ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் டி சீரிஸ்
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் இரண்டு நிறுவனங்களை ஓரம்கட்டும் விதமாக வட இந்தியாவைச் சேர்ந்த இரு பெருநிறுவனங்கள் தென்னிந்தியாவில் கால்பதிக்கின்றன.

திரை ஆர்வலர்களுக்கு எப்போதும் ஒரே கதையாக இருந்தால் போர் அடித்துவிடும். அதனால் கதை சொல்லும் பாணியை மாற்றுவது சினிமாவில் தொடர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவிலும் இந்த மாற்றத்தை விதைக்கும் நோக்கில் இரண்டு வட இந்திய நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன.

அதன்படி, ரிலையன்ஸ் நிறுவனமும் டி- சிரீஸும் ஒன்றாக இணைந்து 10-க்கும் மேற்பட்ட படங்களை தமிழில் தயாரிக்க முடிவு செய்துள்ளன. இதற்காக இரு நிறுவனங்களும் சேர்ந்து ரூ. 1000 கோடி முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விரு நிறுவனங்களும் சேர்ந்து ஆக்‌ஷன், த்ரில்லர், இந்தி ரீமேக்குகள், வாழ்க்கை வரலாற்றுப் படங்கள், நகைச்சுவை, காதல் என பல்வேறு வகைகளில் இந்த 10 படங்களும் தயாரிக்கப்படுகின்றன.

தமிழ் சினிமாவுக்கு இந்த வாய்ப்பு நிச்சயம் வளர்ச்சியை தரும் என திரை ஆர்வலர்கள் கணித்துள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பை ரிலையன்ஸ் மற்றும் டீ- சிரீஸ் இணைந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web