ரூ. 20 லட்சம் மதிப்பிலான காரை வாங்கிய அசுரன் பட நடிகை..!

 
அம்மு அபிராமி

அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அம்மு அபிராமி சொந்தமாக கார் வாங்கியுள்ளதாக அவரே சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் அம்மு அபிராமி. ராட்ச்சன் படத்தின் நடித்ததன் மூலம் இவர் பிரபலமானார். அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

அதை தொடர்ந்து தனுஷுக்கு முறைப்பெண்ணாக அசுரன் படத்தில் நடித்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய காட்சியாக இருந்தாலும், இவருடைய நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

அதை தொடர்ந்து கார்த்தியின் தம்பி, நவரஸா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறார். 

இந்நிலையில் கனவு வாகனமான மகிந்தரா கம்பெனியின் தயாரிப்பான தார் என்கிற புதிய வாகனத்தை சமீபத்தில் அம்மு அபிராமி வாங்கியுள்ளார். புதியதாக வாங்கிய காருடன் புகைப்படம் எடுத்து அதை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 

From Around the web