விடுதி உரிமையாளரிடம் ரூ. 50 லட்சத்தை இழந்த நிக்கி கல்ராணி..!

 
விடுதி உரிமையாளரிடம் ரூ. 50 லட்சத்தை இழந்த நிக்கி கல்ராணி..!

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குடிமாறிவிட்ட பிரபல நடிகை நிக்கி கல்ராணி விடுதி உரிமையாளர் ஒருவர் மீது ரூ. 50 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணி பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் சினிமாவில் தொடர்ந்து கிடைத்து வரும் வாய்ப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக சென்னைக்கு குடி பெயர்ந்துவிட்டார். அண்மையில் நிக்கி கல்ராணி தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெங்களுரு கோரமங்கலா பகுதியில் நிகில் என்பவர் நடத்தி வரும் விடுதியில் ரூ. 50 லட்சம் முதலீடுதி செய்திருந்ததாகவும், அவர் தனக்கு மாதம் ரூ. 1 லட்சம் த்ருவதாக கூறி பணத்தை வாங்கியதாகவும், ஆனால் இதுவரை தனக்கு சொன்னபடி பணம் வரவில்லை என்றும், நிகிலிடம் உரிய முறையில் கேட்டாலும் மதிக்கவில்லை என்றும், அதனால் நிகில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு போலீசிடம் நடிகை நிகில் கல்ராணி புகாரளித்துள்ளார்.

பிரபலமான சினிமா நடிகையிடம் ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்திருக்கும் இந்த விவகாரம் கன்னட ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள அம்ருதஹள்ளி காவல்துறை விடுதி உரிமையாளர் நிகிலிடம் விசாரணை நடத்தி வருகிறது. 
 

From Around the web