ரூ. 200 கோடி செலவில் உருவாகும் ஷாரூக்கான் - அட்லீ படம்..!

 
நயன்தாரா மற்றும் ஷாரூக்கான்

பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படம் ரூ. 200 கோடி செலவில் தயாராகவுள்ள விபரம் வெளியாகியுள்ளது.

தமிழில் ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தெறி படத்தில் விஜய்யுடன் அவர் இணைந்தார். இதன்மூலம் அவர்கள் இருக்குவருக்குமிடையில் நல்ல நட்பு உருவானது.

இதன்மூலம் மெர்சல், பிகில் என தொடர்ந்து இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றினர். இவ்விரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் வாயிலாக ஷாரூக்கான் நடிக்கும் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஷாரூக்கான் ‘பதான்’ படத்தில் நடித்து வருகிறார். இதை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். இம்மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தையும் முடிக்க ஷாரூக்கான் திட்டமிட்டுள்ளார். அதை தொடர்ந்து இம்மாத இறுதியில் அட்லீ படத்திற்கான ஷூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கான பட்ஜெட் ரூ. 200 கோடி என்கிற விபரம் தெரியவந்துள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும் சானியா மல்கோத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web