ரூ. 25 கோடி சம்பளத்தை கடந்த சிவகார்த்திகேயன்..! ஆச்சரியத்தில் கோலிவுட்..!

 
சிவகார்த்திகேயன்

தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரூ. 25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன், மெரினா படம் மூலம் சினிமாவில் கால்பதித்தார். அதை தொடர்ந்து மெல்ல மெல்ல அவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஹிட்டாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார்.

தற்போது டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக அனுதீப் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும்தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இரண்டிலும் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.

சீமராஜா படம் தமிழில் தோல்வியை தழுவியது. ஆனால் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதை அடுத்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அது ஹிட்டடித்தது. இதன் காரணமாக அவருக்கு அங்கே வரவேற்பு கூடியது.

அதை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அனுதீப் இயக்கும் தெலுங்குப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். முன்னதாக வெளியான ரெமோ படம் தமிழை விட தெலுங்கில் மெகா ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web