விரைவில் தயாராகும் ருத்ரமாதேவி பார்ட்- 2 “பிரதாப ருத்ரா”..!

 
ருத்ராம்மாதேவி

தனி நாயகியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘ருத்ரம்மாதேவி’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குநர் குணசேகர் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘ருத்ரம்மாதேவி’. அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்தில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் அல்லு அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி இயக்குநர் குணசேகரம் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் ருத்ரம்மாதேவி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குநர் குணசேகரன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்திற்கு ‘பிரதாப ருத்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதாப ருத்ரா என்பவர் காகத்திய வம்சத்தின் கடைசி அரசனாவார். இவர் ராணி ருத்ரம்மாதேவியின் பேரன். விரைவில் இதுகுறித்து இயக்குநர் குணசேகரன் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web