இணையத்தில் வைரலாகும் எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட பதிவு..!

 
1

எஸ்.ஏ. சந்திரசேகர் உடல் நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் நேரடியாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரும் தனது வலைதள பக்கத்தில் இந்த புகைப்படத்தினை வெளியிட்டு ‘பிள்ளைகள் ஒன்று சேரும்போது பெற்றோருக்கு மட்டுமல்ல மொத்த குடும்பத்திற்கே வலிமை கூடுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.


 

From Around the web