2 முறை வாய்ப்பு வந்தும் சந்திரமுகி படத்தில் நடிக்க முடியவில்லை- சதா வருத்தம்..!

 
சதா

சமீபத்தில் தெலுங்கு சேனலுக்கு பேட்டியளித்துள்ள நடிகை சதா, ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் நடிக்கக்கிடைத்த வாய்ப்பை இழந்தது பற்றி மனம் வருந்தி பேசியுள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’. மாபெரும் வரவேற்பு பெற்ற இந்த படத்தை பி. வாசு இயக்கி இருந்தார். தமிழை தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் வங்காளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

முன்னதாக இந்த படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராயிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. தேதி இல்லாததன் காரணமாக அவர் நடிக்கவில்லை. பிறகு அந்த கதாபாத்திரத்தில் சிம்ரன் ஒப்பந்தமாகி நடித்தார். அப்போது அவர் கர்ப்பமடைந்ததால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது.

அதை தொடர்ந்தே ஜோதிகா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் ஜோதிகாவுக்கு முன்னதாக அந்த படத்தில் நடிக்க இருந்தது சதா என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பிரபல தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சதா, சந்திரமுகி படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறிவிட்டது தொடர்பாக பேசியுள்ளார்.

அதில் சந்திரமுகியில் நடிக்கக்கேட்டு இரண்டு முறை வாய்ப்புகள் வந்தன. ஒருமுறை ஜோதிகா நடித்த வேடத்தில் நடிக்க கேட்டார்கள். ஆனால் அப்போது அந்நியன் படத்தில் நடித்து வந்தேன். அதனால் முடியாமல் போனது. பிறகு நயன்தாரா நடித்த துர்கா வேடத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பு வந்தது. அப்போதும் முடியவில்லை. அந்நியன் பட ஒப்பந்தத்தால் சந்திரமுகி வாய்ப்பை இழந்தேன் என மனவருத்தத்துடன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
 

From Around the web