திரையரங்குகளில் வெளியாகும் சாய் பல்லவி படம்- படக்குழு அறிவிப்பு..!

 
லவ் ஸ்டோரி திரைப்படம்
தெலுங்கில் நாக சைத்தன்யாவுடன் சாய் பல்லவி நடித்துள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்துக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிடா படம் தெலுங்கு சினிமாவில் சாய் பல்லவியை அறிமுகம் செய்தவர் இயக்குநர் சேகர் கம்முலா. இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் தான் ‘லவ் ஸ்டோரி’. இந்த படத்திலும் சாய் பல்லவி தான் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கதாநாயகனாக நாகசைத்தன்யா நடித்துள்ளார். தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் நாகசைத்தன்யா ‘லவ் ஸ்டோரி’ படத்தை பெரிதும் நம்பியுள்ளார். மேலும் ‘சாரங்க தரியா’ பட சமூகவலைதளங்களில் ஹிட்டாக்கியுள்ளது, ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

கொரோனா காலக்கட்டத்துக்கு முன்னரே இந்த படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆனால் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில் லவ் ஸ்டோரி படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்திய அரசு இன்னும் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. மேலும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் இதற்கான உத்தரவு அமலில் இல்லை. ஆனால் லவ் ஸ்டோரி படக்குழு படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web