கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாய் பல்லவி படம்- அதிருப்தியில் ரசிகர்கள்..!

 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாய் பல்லவி படம்- அதிருப்தியில் ரசிகர்கள்..!

தெலுங்கு சினிமா சாய் பல்லவி நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி கொரோனோ பாதிப்பு 2 லட்சத்தை கடந்து பதிவாகி வருகிறது. இதனால் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக மீண்டும் சினிமா தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் திண்டாடி வருகின்றனர்.

தெலுங்கில் சாய் பல்லவி நடித்துள்ள ‘விராட பருவம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். முன்னதாக இந்த படம் வரும் 30-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.

விராட பருவம் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது படத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த படத்தை தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

பெண் நக்சைலட்டின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ளார். ராணா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இறுதியில் தன் காதலன் ராணா கையாலேயே சாய்பல்லி சுட்டுக்கொல்லப்படுவது போல கிளைமேக்ஸ் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தில் சாய் பல்லவிக்காக எழுதப்பட்ட பாடலும் நன்றாக ஹிட்டானது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது சாய் பல்லவி ரசிகர்களை கலக்கமடையச் செய்துள்ளது. 
 

From Around the web