சாய் பல்லவி படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு- ரசிகர்கள் உற்சாகம்..!

 
லவ் ஸ்டோரி திரைப்படம்

தெலுங்கில் நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி ஜோடியாக நடித்துள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி தெலுங்கில் கொடி கட்டி பறந்து வருகிறார். இவரை தெலுங்கு சினிமாவுக்கு ’ஃபிதா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்த இயக்குநர் சேகர் கம்மூலா. இவருடைய இயக்கத்தில் இரண்டாவது முறையாக சாய் பலல்வி நடித்துள்ள படம் ‘லவ் ஸ்டோரி’.

இதில் நாக சைத்தன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் இணையதளங்களில் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டே நிறைவு பெற்றுவிட்ட இந்த படம் கொரோனா ஊரடங்கு மற்றும் திரையரங்குகள் இயங்காததன் காலமாக வெளியிட முடியாமல் இருந்தது.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 24-ம் தேதி செப்டம்பர் வெளியாகும் என ‘லவ் ஸ்டோரி’ படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் படத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

From Around the web