பிரபல பாலிவுட் நடிகரின் மகனுடன் சாய் பல்லவி குத்தாட்டம் ..?

 
1

'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. 

அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் 'மாரி 2', 'என்.ஜி.கே', 'கார்க்கி' என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் நடிகையாக இருந்தாலும் சாய் பல்லவி நிஜத்தில் டாக்டர் படிப்பை முடித்திருப்பவர்.

இந்த நிலையில் நடிகர் சாய் பல்லவி,  நடிகர் அமீர் கான் மகன்  ஜுனைத் கானுக்கு ஜோடியாக நடிக்கும் திரைப்பட குழுவினரோடு பார்ட்டியில் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது குறித்த போட்டோஸ், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

அதாவது, பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி,  நடிகர் அமீர் கான் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை அமீர் கான் தயாரிக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்த  படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது.இவ்வாறு முதல் கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடந்து முடிந்துள்ள நிலையில், இதனை ட்ரிங்க்ஸ் பார்ட்டியுடன் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.  

இதில் சாய் பல்லவி குடிக்கவில்லை என்றாலும் ஆடிப்பாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது குறித்த வீடியோ, போட்டோஸ் வைரலாகி உள்ளது. 

  

From Around the web