தேசியப்போர் நினைவிடத்தை பார்வையிட சென்ற சாய் பல்லவி..!
Oct 28, 2024, 06:05 IST

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் ஜி.வி பிரகாஷின் இசையமைப்பில் சாய்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அமரன்.
தற்போது நடிகை சாய் பல்லவி "அமரனுக்கான ப்ரோமோஷன் வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னதாக தேசியப் போர் நினைவிடத்தைப் பார்க்க விரும்பினேன். இந்த புனிதமான கோவிலில், நமக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களின் நினைவாக ஆயிரக்கணக்கான "செங்கல் போன்ற மாத்திரைகள்" உள்ளன. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரம் சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் போது நான் மிகவும் உணர்ச்சிக்குளாகினேன் "என குறிப்பிட்டு அங்கு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.