அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்த சாய் பல்லவி- வைரல் புகைப்படங்கள்..!!
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய்பல்லவி தெலுங்கு சினிமாவில் பெரும்புகழ் பெற்ற நடிகையாக இருக்கிறார். தற்போது அவர் கமல்ஹாசன் தயாரிப்பு சிவகார்த்தியேகன் நடித்து வரும் ‘எஸ்.கே. 21’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடந்து வருகிறது. தற்போது காஷ்மீரில் தற்போது அமர்நாத் யாத்திரைக்கான சீசன் துவங்கியுள்ளது. இரண்டு வாரங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த சீசனில் பல்வேறு சாகசப் பயணங்கள் செய்து பனி ரூபத்தில் காட்சித் தரும் சிவனை பக்தர்கள் தரித்து வருவார்கள்.
இந்தாண்டு தோன்றியுள்ள பனிலிங்கத்தை காண்பதற்கு நடிகை சாய்பல்லவி அமர்நாத குகை கோயிலுக்கு சென்று திரும்பியுள்ளார். அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. யாத்திரை முடிந்ததும் காஷ்மீரில் நடந்து வரும் எஸ்.கே. 21 பட ஷூட்டிங்கில் சாய்பல்லவி பங்கேற்று வருகிறார்.