நடனம் மட்டுமே போதும்- வித்தியாசமாக கருத்தை முன்வைக்கும் சாய் பல்லவி..!

 
சாய் பல்லவி
உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து குறித்து நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ள கருத்து சமூகவலைதளங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சாய் பல்லவி. சில தமிழ் படங்களில் அவர் நடித்திருந்தாலும், தெலுங்கு சினிமாவின் நம்பன் ஒன் நடிகையாக அவர் மாறிவிட்டார்.

சமீபத்தில் வெளியான ‘லவ் ஸ்டோரி’ படம் பெரியளவில் ரசிகர்களிடம் வரவேற்பை ஈர்க்கவில்லை. ஆனால் அந்த படத்தில் சாய் பல்லவி ஆடிய நடனத்தை பார்க்கவே கூட்டம் அலைமோதியது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் இந்த படத்தை பார்த்து சாய் பல்லவிக்கு புகழாரம் சூட்டினார்.

நடிகைகள் பலரும் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுதொடர்பாக சாய் பல்லவியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வைரலை கிளப்பியுள்ளது.

நடனம் தான் சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது. தினமும் 30 நிமிடங்கள் நடனமாடினால் 400 கேலரி வரை குறைத்துவிட முடியும். எனக்கு ஜிம் எல்லாம் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இதை பலரும் ஆமோதித்தும் வருகின்றனர். காரணம், சாய் பல்லவி அடிப்படையில் ஒரு மருத்துவர் ஆவார். அதனால் அவருடைய கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

From Around the web