200 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாய் பல்லவியின் தெலுங்குப் பாடல்..!

 
சாய் பல்லவி

சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாராங்க தரியா’ பாடல் யூ - ட்யூப்பில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தெலுங்கில் ’ஃபிதா’ படத்தை தொடர்ந்து சேகர் கம்முல்லா இயக்கியுள்ள படம் ‘லவ் ஸ்டோரி’. இந்த படத்தில் நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில பாடல்கள் இணையத்தில் வெளியாகின. அதில் சாய்பல்லவியின் தனிப் பாடலான ‘சாராங்க தரியா’ பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தெலங்கானா நாட்டுப்புறப் பாடலின் பின்னணியில் உருவான இந்த பாடல் தற்போது 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

தெலுங்கு சினிமாவுக்கே உரித்தான பீட் இசை, நாட்டுப்புறப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு சேகர் என்பவர் கொரியாகிராஃபி செய்துள்ளார். மேலும் சாய்பல்லவி இந்த பாடலுக்கு ஆடியுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

முன்னதாக மாரி 2 படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல் சுமார் 1 பில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அதற்கு முன்பு வெளியான ‘ஃபிதா’ படத்தில் இடம்பெற்ற ‘வச்சிந்தே’ பாடல் 300 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அந்த வரிசையில் ‘சாரங்க தரியா’ பாடலும் சாய் பல்லவியின் வைரல் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளது டாலிவுட் சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

From Around the web