கடைசி வரை நிறைவேறாமல் போன புனித் ராஜ்குமாரின் ஆசை..!

 
புனித் ராஜ்குமார்

திடீரென மாரடைப்பால் இளம் வயதில் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நிறைவேறாத ஆசை குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான புனித் ராஜ்குமார் நேற்று காலை மாரடைப்பால் காலமானார். வீட்டில் இருக்கும் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் போது உடலில் அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவருடைய மரணம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இன்று  முழு அரசு மரியாதையுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் நிறைவேறாத ஆசை குறித்து தெரியவந்துள்ளது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் அவருடைய அண்ணன் சிவராஜ்குமார் நடிப்பில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று திட்டமிட்டு வந்துள்ளார். அது கடைசி வரை நிறைவேறாமல் போனதாக புனித் ராஜ்குமாரின் நண்பர்கள் பலர் கூறி வருகின்றனர்.
 

From Around the web