தேவதாசி கதாபாத்திரத்தில் சாய்பல்லவி ?

 
1

தொடர்ச்சியாக 2008 ம் ஆண்டு தமிழில் வெளிவந்த தாம் தூம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு, 2015 ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் சாய் பல்லவி பிரபலமானார். இதில் அவர் ஏற்று நடித்த மலர் டீச்சர் கதாப்பாத்திரம் பலராலும் சிலாகிக்கப்பட்டது. இதையடுத்து, சாய் பல்லவிக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. 

இந்நிலையில்  ‘ஷியாம் சிங்கா ராய்’ என்ற தலைப்பில் உருவாகி உள்ள தெலுங்குத் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு நானி கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை ராகுல் சாங்கிரித்யன் இயக்கி உள்ளார்.

இதில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இது குறித்த கூறுகையில், மிக சவாலான வேடத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது என்கிறார்.

இதோ இந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக 

From Around the web