தியேட்டரில் ரசிகர்களுடன் சாக்ஷி தோனி.. வைரல் வீடியோ..!

கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், ராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி தோனி படத் தயாரிப்பில் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
அந்த வகையில் தோனி என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “Lets Get Married” என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வரும் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த இவானா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 80’ஸ் நாயகி நதியாவும், ட்ரெண்டிங் காமெடி நடிகர் யோகி பாபு என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சாக்ஷி தோனி சொன்ன கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. ரமேஷ் தமிழ்மணி இந்தப் படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியதோடு இசையமைக்கவும் செய்துள்ளார். இன்று திரையரங்குளில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
FDFS scenes for #LGM at @RohiniSilverScr in Chennai - a full house audience and loud cheers for the film!@DhoniLtd @msdhoni @SaakshiSRawat @Ramesharchi @iamharishkalyan @i__ivana_ @ActressNadiya @iyogibabu @rjvijayofficial @vp_offl @Actor_Srinath @vaidhyamohan5 @VinodhiniUnoffl… pic.twitter.com/9BsVSRranX
— Yuvraaj (@proyuvraaj) July 28, 2023
இந்த நிலையில் சாக்ஷி தோனி, ஹரிஷ் கல்யாண், இவானா உள்ளிட்ட எல்ஜிஎம் படக்குழுவினர்களுடன் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்த்தார். அப்போது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.