’சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
salaar movie

கே.ஜி.எஃப் சிரீஸ் படங்களை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சலார்’. இந்த படத்தையும் கேஜிஎஃப், காந்தாரா போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை தயாரித்த ஹொம்பாலே ஃப்லிம்ஸ் தான் தயாரிக்கிறது. சலா படத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் சுகுமாறன், ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஷூட்டிங் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 

இதுவரை எந்த இந்தியப் படங்களுக்கும் இல்லாத வகையில், சலார் படத்தில் வெளிநாடு விற்பனை ரூ. 90 கோடிக்கு விலை போயுள்ளது. இதனால் சலார் படம் வெளியாகும் முதல்நாளிலே ரூ. 200 கோடி வரை வசூலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் சலார் படம் வரும் அக்டோபர் 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யபப்ட்டும் இப்படம் வெளியாகிறது.

படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகின் மிக மோசமான வன்முறையாளன் செப்டமர் 28-ம் தேதி வருகிறான். அவனை காணுவதற்கு எல்லோரும் தயாராக இருங்கள் என்று படக்குழுவின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

From Around the web