மாற்றப்படும் ‘சலார்’ பட ரிலீஸ் தேதி..??

கேஜிஎஃப் படத்துக்கு பிறகு இந்திய சினிமாவில் கவனிக்கப்படக் கூடிய இயக்குநராக மாறியுள்ளார் பிரசாந்த் நீல். அவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் சலார். பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ப்ரித்விராஜ் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்ததை அடுத்து, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் துவங்கியுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக இந்த படம் செப்டம்பர் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் என படத்தை தயாரித்து வரும் ஹொம்பாலே ஃப்லிம்ப்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு ‘சலார்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியானது.
#Salaar Rebelling Worldwide On 𝐒𝐞𝐩 𝟐𝟖𝐭𝐡, 𝟐𝟎𝟐𝟑 pic.twitter.com/8cuZpeHrZO
— AGS Cinemas (@agscinemas) May 15, 2023
இதனால் படத்தை எதிர்பார்த்து வந்த தமிழக ரசிகர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தமிழில் படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம் சலார் படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாவதை ட்விட்டரில் போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.