சலார் படத்தின் டீசர் வெளியீடு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
 

இந்திய சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் சலார் படத்தின் டீசர் வெளியீடு தொடர்பாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
salaar

கே.ஜி.எஃப் சிரீஸ் படங்களின் பெரும் வெற்றிக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சலார். சுமார் இரண்டாண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

கே.ஜி.எஃப் படங்களை தயாரித்த ஹொம்பாலே ஃப்லிம்ப்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. ஹீரோவாக பிரபாஸ் மற்றும் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றன.

படம் தொடர்பாக பல்வேறு விதமான போஸ்டர்கள் வந்துவிட்ட நிலையில், சலார் படம் எப்படியிருக்கும் என்பதற்கான ஒரு ஸ்பை வீடியோ கூட வெளிவரவில்லை. அந்தளவுக்கு மிகவும் கெடுபிடிகளுடன் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றன.


இந்நிலையில் சலார் படத்தின் டீசர் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படத்தின் டீசர் விடியற்காலை நேரத்தில் வெளியாவது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

From Around the web