ஆமிர் கான் வீட்டுக்கு அருகே பிரமாண்டமான ஹோட்டல் கட்டும் சல்மான் கான்..!!
நடிகர் சல்மான் கான் தற்போது டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இந்தி திரைப்பட ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த வாரம், இதன் ஷூட்டிங்கில் இருந்தபோது சல்மான் கானுக்கு காயம் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மும்பையின் பிரபலமான பாந்த்ரா பகுதியில் 19 மாடிகள் கொண்ட பிரமாண்டமான மற்றும் நட்சத்திர அந்தஸ்த்தை கொண்ட விடுதையை அவர் கட்டவுள்ளார். இந்த ஆடம்பர விடுதி, நடிகர் ஆமிர் கானின் வீட்டிலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் அமையவுள்ளது.
மொத்தமாம 3 அடுக்கு பேஸ்மண்ட் கொண்ட இந்த ஹோட்டலில், முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் கஃபே செயல்படவுள்ளது. அதற்கு மேலா ரெஸ்டாராண்ட் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாவது தளத்தில் ஜிம், நீச்சல் குளமும், நான்காவது தளம்- பியூட்டி பார்லர், நீச்சல் குளம், மசாஜ் தளம் போன்ற சர்வீஸ் வழங்கும் பகுதியாக இருக்கும். ஐந்து மற்றும் ஆறாவது தளத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கன்வென்சன் பகுதியாக இருக்கும்.
தொடர்ந்து ஏழாவது தளம் துவங்கி 19-வது தளம் வரை விருந்தினர் தங்குவதற்கான அறைகள் கட்டப்படவுள்ளன. முன்னதாக அந்த படத்தில் ஒரு குடியிருப்பு பகுதியை கட்ட சல்மான் கான் குடும்பத்தினர் முடிவு செய்தனர். அந்த முடிவை மாற்றிவிட்டு தற்போது ஆடம்பர ஹோட்டல் கட்ட முடிவு செய்து, வேலையை துவங்கியுள்ளனர்.