மகன் கைதான உடன் ஷாரூக்கான் வீட்டுக்கு சென்ற சல்மான் கான்..!

 
ஷாரூக்கான் வீட்டுக்கு சென்ற சல்மான் கான்

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதை தடுப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, சல்மான் கான் ஷாரூக்கான் வீட்டுக்கு சென்றது பேசுபொருளாகியுள்ளது.

மும்பையில் இருந்து கோவாவுக்கு சொகுசு கப்பல் ஒன்று புறப்பட்டது. இந்த கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கான பார்ட்டி நடப்பதாக செய்திகள் போலீசாருக்கு கிடைத்தன. போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர், பயணம் மேற்கொள்பவர்கள் போல அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி கொண்டு கப்பலில் ஏறினர்.

அதை தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்திய பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒருவர் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் வரும் 7-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தகவல் வெளியான உடன் பாலிவுட் ஹீரோ சல்மான் கான், திடீரென ஷாருக்கான் வீட்டுக்குச் சென்றார். பாலிவுட் சினிமாவில் எதிர் எதிர் துருவங்களாக அறியப்படும் அவர்கள், இதுபோன்ற சிக்கல் ஏற்பட்ட போது சந்தித்துக் கொண்டது பேசுபொருளாகியுள்ளது. இதற்கிடையில் ஷாரூக் கானுக்கு நேரில் ஆறுதல் கூறவே சல்மான் கான் சென்றதாக அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 

From Around the web