சிரஞ்சீவி படத்தில் சல்மான் கான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான்

பாலிவுட் சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகரான் சல்மான் கான், தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான ‘லூசிஃபர்’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. மோகன் ராஜா இயக்கி வரும் படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.

மலையாள லூசிஃபர் படத்தில் ஹீரோவாக மோகன்லால் நடித்திருந்தார். அவருடைய பாதுகாவலராக ப்ரித்விராக் நடித்திருப்பார். அவர் தான் அந்த படத்தையும் இயக்கி இருந்தார். அவருடைய கதாபாத்திரம் சிறியளவில் தான் இருக்கும் என்றாலும் படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தெலுங்கு சினிமாவில் இப்படம் ரீமேக் செய்யப்படும் நிலையில், ப்ரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் சல்மான் கான் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.

From Around the web