புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட வரும் சல்மான் கான் பட கதாநாயகி..!

 
அல்லு அர்ஜுன் மற்றும் தீஷா பதானி

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் ‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குணசேகரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகி வரும் புஷ்பா. செம்மரக் கட்டை கடத்தல் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படம் இரண்டு பாகங்களுடன் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் ஆகஸ்டு 13-ம் தேதி வெளியாகவும் எனவும், இரண்டாம் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெர்றுள்ள ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு பிரபல நடிகைகளின் பெயர் பரிசீலனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த பாடலுக்கு ஆடுவதற்கு தீஷா பதானியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இதற்கான ஷூட்டிங் பணிகள் துவங்கப்படவுள்ளன. முன்னதாக ரம்ஜான் பண்டிகைக்கு வெளியான ‘ராதே’ படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக தீஷா பதானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web