சமந்தாவும் தானும் விவாகரத்து செய்ய உள்ளோம்... நடிகர் நாக சைதன்யா அறிவிப்பு..!!

 
1

காதல் திருமணம் செய்து கொண்ட சமந்தாவும். நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரியப் போவதாகவும் இதற்காக நீதிமன்றத்தை இருவரும் நாடி உள்ளதாகவும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

மூன்று தடவை இருவரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அவர்கள் பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும் தெலுங்கு பட உலகினர் பேசி வருகிறார்கள். இதனை இருவரும் இதுவரை மறுக்கவில்லை.

சமந்தா சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பது நாக சைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும் அவர்கள் எதிர்ப்பை மீறி பேமிலிமேன் 2 வெப் தொடரில் அவர் நடித்ததே குடும்ப வாழ்க்கை முறிவுக்கு காரணம் என்றும் பேசுகின்றனர்.

தற்போது சமந்தா ஐதராபாத்தில் குடியிருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு மும்பையில் குடியேற அவர் திட்டமிட்டு உள்ளதாக செய்தி பரவி உள்ளது.

இந்நிலையில் சமந்தா ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நீங்கள் நிஜமாகவே மும்பையில் குடியேறப் போகிறீர்களா என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து சமந்தா கூறும்போது, “எங்கிருந்து இந்த வதந்தி தொடங்கியது என்று தெரியவில்லை. மற்ற நூறு வதந்திகள் போன்று இதுவும் உண்மை இல்லை. ஐதராபாத் எனக்கு நிறைய கொடுத்து இருக்கிறது. எப்போதுமே ஐதராபாத்தே எனக்கு வீடு. நான் ஐதராபாத்தில்தான் தொடர்ந்து வாழ்வேன்” என்றார்.

இந்நிலையில், சமந்தாவும் தானும் விவாகரத்து செய்ய உள்ளதாக நடிகர் நாக சைதன்யா அறிவித்துள்ளார். சமந்தாவும் தானும் இனியும் கணவன் மனைவியாக இருக்கப்போவதில்லை என்று கூறிய அவர், விவாகரத்து செய்தாலும் சமந்தாவுக்கும் தனக்கும் நட்பு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து செய்ய முடிவு செய்ய இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web