அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார் சமந்தா..!

 
சமந்தா

நாக சைத்தன்யாவை விட்டு பிரிவதாக அறிவித்த நடிகை சமந்தா வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். நாட்டில் பல்வேறு இடங்களுக்கு முன்னதாக சுற்றுலா சென்ற அவர், தற்போது நண்பர்களுடன் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தி மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி புதியதாக படம் தயாரிக்கவுள்ளார். இதில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இரண்டு மொழிகளிலும் அவர் தான் கதாநாயகியா என்பது தெரியவில்லை.

இந்நிலையில் தன்னுடைய சம்பளத்தை அவர் ரூ. 3 கோடி வரை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இது உறுதியானால் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிகம் சம்பளம் வாங்கும் மூன்றாவது நடிகையாக சமந்தா இருப்பார்.

முதல் இடத்தில் நயன்தாராவும் இரண்டாம் இடத்தில் த்ரிஷாவும் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தை கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா பகிர்ந்து கொண்டுள்ளனர். விரைவில் டாப்ஸி தயாரிப்பில் அவர் நடிக்கும் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web