த்ரிஷா, கீர்த்தி சுரேஷுடன் வீக் எண்ட் பார்டி கொண்டாடிய சமந்தா...!

 
சமந்தா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகியோருடன் நடிகை சமந்தா வார இறுதிநாள் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு ஹைதராபாத்தில் வாழ தொடங்கினார். ஆனால் இப்போது அவர்கள் இருவருக்குமிடையில் பிரிவு ஏற்படுவது குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவருடைய செயல்பாடுகளும் அமைந்து வருகின்றன. முன்னதை விடவும் இப்போது தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சமந்தா. மேலும் தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் நெருக்கம் காட்டவும் தொடங்கியுள்ளார்.

திருமணத்துக்கு முன்னதாக எப்போதும் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார் சமந்தா. ஆனால் இப்போது அவருடைய அணுகுமுறையே மாறிவிட்டது. நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் அவர் நடித்து வருகிறார்.அதேபோல கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகியோருடன் வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை அவராகவே சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதுதொடர்பாக ”கடந்த வார மாலை நேரம் அற்புதமாக இருந்தது. த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணிக்கு மிக்க நன்றி ” என்று பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சமந்தா வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடிய சமயத்தில் ஹைதராபாத்தில் நாக சைதன்யா நடித்துள்ள ‘லவ் ஸ்டோரி’ பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் சிரஞ்சீவி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் சமந்தா பங்கேற்காதது இருவருக்குமிடையே பிரிவை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web