விவகாரத்து அறிவிப்புக்கு பிறகு மீண்டும் பெயரை மாற்றிய சமந்தா..!
தென்னிந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நட்சத்திர தம்பதிகளாக இருந்தவர்கள் சமந்தா மற்றும் நாக சைத்தன்யா. கடந்த 2-ம் தேதி இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக சமூகவலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.
இன்னும் ஐந்து நாட்களில் அவர்களுடைய மூன்றாமாண்டு திருமண நாள் வரவிருந்தது. அதற்கு முன்னதாக சமந்தா - நாக சைத்தன்யா ஜோடி பிரிவை அறிவித்தது ரசிகர்களிடையே கவலையை உருவாக்கியது.
முன்னதாக தன்னுடைய பெயரில் இருந்துவந்த நாக சைத்தன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை நீக்கிவிட்டார் சமந்தா. அதற்கு பிறகு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெறும் எஸ் என்று மட்டும் வைத்துக் கொண்டார்.
விவகாரத்து அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தற்போது தற்போது பெயரை எஸ்-ல் இருந்து சமந்தா என்று மாற்றிக்கொண்டுள்ளார். முன்னதாக அவர் அக்கினேனி குடும்பத்தார் தரவிருந்த ரூ. 200 கோடி ஜீவனாம்ச தொகையை மறுத்துவிட்ட செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 - cini express.jpg)