நாக சைத்தன்யா நினைவுகளை டெலிட் செய்து வரும் சமந்தா..!

 
நாக சைதன்யா மற்றும் சமந்தா

வெளிநாடுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்த நினைவுகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளாராம்.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, சமீபத்தில் அவரை பிரிவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து இருவருடைய பிரிவுக்கு காரணம் குறித்து பல்வேறு உறுதியற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிரிவுக்கு பிறகு தனக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக சமந்தா வீடியோ வெளியிட்டார். அதை தொடர்ந்து நாட்டிலுள்ள பல்வேறு திருத்தலங்களுக்கு சுற்றுலா சென்றார். 

அங்கிருந்து திரும்பிய பின்னர் தற்போது நண்பர்களுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் எந்த நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. விரைவில் இந்தியா திரும்பிவிடுவார் என்று மட்டும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்த 75-கிற்கும் மேலான நாக சைதன்யாவின் புகைப்படங்களை அவர் நீக்கியுள்ளார். ஒரு சில நாக சைதன்யாவின் புகைப்படங்களே சமந்தா விட்டுவைத்துள்ளார்.
 

From Around the web