திருமணத்திற்கு பிறகும் கவரிச்சியை குறைக்காத சமந்தா..!
 

 

சமீபத்தில் நடிகை சமந்தா நடத்தியுள்ள படுகவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த நடிகை சமந்தா, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு திரையுலகில் கொட்டிகட்டி பறந்து வருகிறார். சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் போதே இல்லற வாழ்க்கையில் இணைந்த இவர், பிரபல தெலுங்கு சினிமாவின் நடிகரும் நாகர்ஜூனாவின் மகனுமான நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது முற்றிலுமாக ஹைதராபாத்தில் வசித்து வரும் சமந்தா தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் நயன்தாரா மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தியில் தயாராகியுள்ள ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சிரீஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமந்தாவுக்கு அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதை சமூகவலைதளங்களில் பதிவிடுவது மிகவும் பிடிக்கும். சமீபத்தில் பச்சைநிற ஃபிராக் அணிந்து படு கவர்ச்சியாக எடுக்கப்பட்ட போட்டோக்களை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோஷூட் ரசிகர்களை மட்டுமில்லாமல் சக நடிகைகளையும் கவர்ந்துள்ளது.

திருமணம் முடிந்துவிட்டாலும் சமந்தாவிடம் இருக்கும் தொழில் ரீதியான அணுகுமுறைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடிகைகள் ஹன்சிகா, ராஷி கண்ணா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் சமந்தா மிகவும் அழகாக இருப்பதாக பலரும் பாராட்டுக்களை பதிவு செய்துள்ளனர். 

From Around the web