தமிழ், தெலுங்கை விட இந்திக்கு முக்கியத்துவம் தரும் சமந்தா..!
 

 
சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படங்கள் முடித்துவிட்டதை அடுத்து நடிகை சமந்தா இந்தி சினிமா மற்றும் வெப் சிரீஸ்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவரவுள்ளது. இதையடுத்து இந்திப் படங்களில் நடிப்பதற்கு அவர் தயாராகி வருகிறார்.

ஏற்கனவே தி ஃபேலிமி மேன் சீசன் 2 வெப் சிரீஸில் நடித்து சமந்தா பாலிவுட் சினிமாவில் பெருமளவில் கவனமீர்த்துள்ளார். அட்லீ இயக்கும் ஷாரூக்கான் படத்தில் முதலில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதற்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் குழந்தை பெறுவது மற்றும் சினிமாவை விட்டு விலகும் முடிவில் அப்போது அவர் இருந்ததால், படத்தில் நடிக்கவில்லை. தற்போது அந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். விட்ட வாய்ப்பை பிடிக்கும் நோக்கில் இந்தி சினிமாவில் நடிப்பதற்கு சமந்தா ஆயத்தமாகி வருகிறார்.

அதன்படி இந்தியில் ஒரு படத்தில் அவர் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு வெப் சிரீஸிலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஒரு தெலுங்குப் படத்திலும் அவர் நடிக்கிறார். விரைவில் சமந்தாவின் புதிய ஒப்பந்தங்கள் தொடர்பான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web