முயலிடம் கடி வாங்கிய சமந்தா- ஒருவேளை இதுதான் காரணமோ..??
 

அண்மையில் ஒளிப்பரப்பான பேட்டியில் தான் முயலிடம் கடி வாங்கியுள்ளதாக சமந்தா தெரிவித்துள்ள தகவல், ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
 
samantha

தெலுங்கில் குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், மதுபாலா, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் சகுந்தலம். முழுக்க முழுக்க விஷுவல் எஃபெக்ட்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், நாளை வெளிவருகிறது.

இதையொட்டி சமந்தா அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். சகுந்தலம் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பேசிய சமந்தா, எனக்கு பூக்கள் என்றால் ஒவ்வாமை உள்ளது. ஆனால் சகுந்தலம் படத்தில் சகுந்தலாவாக நடிக்கையில் தோல், கை மற்றும் கால்களில் மலர் கொடிகளை சுற்றிக் கொண்டு நடித்தேன்.

அப்போது எனது சருமத்தில் தடிப்புகள் உருவாக ஆரம்பித்தன. அடுத்தநாள் அது டாட்டூ போட்டது போல மாறிவிட்டது. அந்த இடத்தில் மேக்-அப் போட்டுக்கொண்டு, எல்லாற்றையும் மறைத்துக் கொண்டு நடித்தேன். தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் இந்தியில் என்னுடைய கேரக்டருக்கு நான் தான் டப்பிங் கொடுத்தேன்.

அதுதான் மிகவும் கஷ்டமாக இருந்தது. நல்லவேளையாக தமிழ் படித்திருந்ததால் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால் தெலுங்கிலும் இந்தியிலும் படாதபாடு பட்டுவிட்டேன். சகுந்தலம் படத்தில் நடித்த போது, என்னை ஒரு முயல் கடித்துவிட்டது. அதுவரை எனக்கு முயல் மிகவும் பிடித்த விலங்காக இருந்தது. அதுமுதல் நான் முயலை கண்டாலே பயந்து ஓடிவிடுவேன் என்று சமந்தா பேசியுள்ளார்.

இந்த தகவல் வெளியானதில் இருந்து, ரசிகர்களுக்கு கவலை அதிகரித்துள்ளது. ஒருவேளை சகுந்தலாவுக்கு ஏற்பட்டுள்ள மயோசைட்டிஸ் என்கிற பாதிப்பு, முயல் கடித்ததால் தான் வந்துவிட்டதா? என்கிற கேள்வியை பல ரசிகர்கள் முன்வைத்துள்ளனர். ஆனால் அப்படியெல்லாம் இந்த நோய் பாதிப்பு ஏற்படாது. இதற்கு வேறு சில உடல்நிலை காரணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web