ஆமிர்கானுடன் கணவர் நாகசைத்தன்யா- மகிழ்ச்சி மழையில் சமந்தா..!

 
சமந்தா

பாலிவுட்டில் தயாராகி வரும் ‘லால் சிங் சத்தா’ படத்தில் ஆமிர்கானுடன் கணவர் நாக சைத்தன்யா இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, திரைப்பட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. இந்தியில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் படம் ‘லால் சிங் சத்தா’.

இது ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்காகும். இதில் டாம் ஹாங்க்ஸ் நடித்த வேடத்தில் அமீர் கான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா நடித்துள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து அவர் விலகினார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் நாக சைத்தன்யா நடிக்கிறார். கார்கில் போர் காட்சிகள் சம்மந்தப்பட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

அப்போது ஆமீர்கானுடன் கணவர் நாக சைத்தன்யா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா. மேலும் அந்த புகைப்படத்தில் ஆமிர்கானை சமீபத்தில் விவகாரத்து செய்த கிரண் ராவும் இடம்பெற்றுள்ளார்.

From Around the web