வைரலாகும் போட்டோ - செம கிளாமர் உடையில் சமந்தா..!!

 
1

நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின்னர் வெளியான ஓ சொல்றியா பாடலால் சமந்தா மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தெலுங்கு தமிழில் ஆண்கள் சங்கத்தினர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். புஷ்பா பட நிகழ்ச்சியின் போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அல்லு அர்ஜூன் பாடல் வரிகள் மீதான விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் பாடல் வரிகளில் இருப்பதை சுட்டிக்காட்டி உண்மைதான என பதிலளித்தார்.

இந்த நிலையில் படம் ரிலீஸாகி ரசிகர்களை கவர்ந்து வரும் வேளையில் படத்தில் இடம்பெற்றுள்ள சமந்தா ஆடிய பாடலை ரசிகர்கள் ஏகபோகமாக கொண்டாடி வருகின்றனர். 

1

இந்நிலையில், புத்தாண்டை கொண்டாட சமந்தா தன் தோழிகளுடன் கோவாவுக்கு சென்றிருக்கிறார். நீர்வீழ்ச்சியில் குளித்தபோது எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். தோழிகள் இருவரும் பிகினியில் இருக்க, சமந்தா நீச்சல் உடை அணிந்திருக்கிறார்.

1

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பது முகத்தில் தெரிகிறது. எப்பொழுதும் இப்படியே இருங்கள். புத்தாண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையட்டும் என தெரிவித்துள்ளனர்.சமந்தா தற்போது ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு தான் கோவாவுக்கு சென்றிருக்கிறார். 

மேலும் இந்த புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது. 

From Around the web