வருத்தத்தில் சமந்தா... ஏன் தெரியுமா ?  

 
1

பிரபல நடிகை சமந்தா சினிமாவில் இருந்து தற்போது ஓய்வெடுத்து தசை அழற்சி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் மேனேஜர் சமந்தாவிடம் ரூ. 1 கோடி வரை மோசடி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மேனேஜரிடம் சமந்தா விவரம் கேட்டபோது அவர் சொன்ன பதில் திருப்தியாக இல்லை என்று கூறப்படுகிறது.

அவர் பற்றி சில தயாரிப்பாளர்கள் புகார் கூறியும் கேட்காமல் அவரையே தனது மேனேஜராக சமந்தா வைத்திருந்தார் என்றும் இப்போது அவரை சமந்தா நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.ஏற்கெனவே நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மானேஜர் ரூ.80 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக புகார் வந்ததை அடுத்து அவரை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

From Around the web