டேட்டிங் கோரிக்கை விடுத்த ரசிகரை வாயடைக்கச் செய்த சமந்தா..!!

கடந்த சில ஆண்டுகளாகவே சமந்தா நடித்த படங்கள் பெரியளவில் வரவேற்பு பெறாமல் இருந்து வருகின்றன. 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை அவருடைய நடிப்பில் வெளியான ஜானு, காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகியவை தோல்வியை தழுவின. புஷ்பா படத்தில் அவர் கவுரவ வேடத்தில் நடித்த பாடல் மட்டும் ஹிட்டானது.
இந்த வரிசையில் சமந்தா நடிப்பில் சகுந்தலம் மற்றும் குஷி ஆகிய படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இதில் சகுந்தலா திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டும் படம் வெளியாகிறது.
அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ரசிகர் ஒருவர், ”நீங்கள் யாருடனாவது டேட்டிங் செல்ல வேண்டிம் என்று கோரிக்கை விடுகிறேன்” என ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் பேசி இருந்தார்.
அதற்கு பதிலளித்த சமந்தா, உங்களை விட என்னை அதிகம் நேசிக்கப்போவது யார் என்று பதில் கேள்வி கேட்டுள்ளார். இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘சகுந்தலம்’ படத்தில் சமந்தா, மலையாள நடிகர் தேவ் மோகன், அதிதி பாலன், மதுபாலா, ஜெகன் பாபு உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள சகுந்தலா படத்தில் 80 சதவீதம் கிராஃபிக்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.