சமந்தா - நாக சைத்தன்யா பிரிவுக்கு இவரே காரணம்: கங்கனா பகீர்..!

 
கங்கனா ரணாவத்

தென்னிந்திய சினிமா நட்சத்திர தம்பதிகளாக இருந்த சமந்தா மற்றும் நாக சைத்தன்யாவுக்கு பிரிவுக்கு பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகரே காரணம் என கங்கனா பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகர்கள் நாக சைத்தன்யா மற்றும் சமந்தாவுக்கு திருமணம் நடந்தது. அதை தொடர்ந்து விளம்பரங்கள், திரைப்படங்களில் ஒன்றாக நடிக்க துவங்கினர். மேலும் மற்ற சில படங்களிலும் சமந்தா நடித்தார்.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவனிடம் இருந்து பிரிந்து சமந்தா வேறொரு வீட்டில் வசிப்பதாக தகவல்கள் வெளியாகின. அதை தொடர்ந்து பல்வேறு செய்திகள் அவர்கள் குறித்து வெளியாகின.

அதை தொடர்ந்து தாங்கள் இருவரும் மனம் சம்மதத்துடன் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். இது பல்வேறு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு ரசிகர்களும் பிரபலங்களும் நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இருவருக்கும் ஆறுதல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள கங்கனா, திருமண முறிவு ஏற்படுவதற்கு காரணம் ஆண்கள் தான். பெண்களை ஆடைகள் போன்று பயன்படுத்தி தூக்கி எறிந்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் நடிகர்களாக இருப்பதும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நடந்துக்கொள்வது வெட்கக்கேடானது. இதுபோன்ற விவாகரத்து முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்து வருவது கவலையை தருகிறது.

மேலும் நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா, அந்த நடிகரை பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று பதிவிட்டு உள்ளார். நடிகர் அமீர்கானை தான் நடிகை கங்கனா ரனாவத் இவ்வாறு சூசகமாக சாடி உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
 

From Around the web