”ஊ சொல்றியா மாமா..” பாடலை பண்ண வேண்டாம் என்று அவர்கள் கூறினர்: சமந்தா..!!
சகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, அதற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. அதை முன்னிட்டு சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் அவர் உரையாடினார்.
அப்போது தனது திரை வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார். மயோசைட்டிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதை குறித்து அவர் மிகவும் உருக்கமாக பேசினார். நோய் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர தனக்கு கால அவகாசம் வேண்டும் எனவும், அதனால் சினிமாவில் இருந்து சிறுது காலம் ஓய்வு எடுக்க விரும்புவதாக அவர் கூறினார்.
மேலும் நாக சைத்தன்யாவை பிரிந்தவுடன் சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா...” என்கிற ஐட்டம் பாடலுக்கு ஆடினார். முன்னதாக, இந்த பாடலில் நடிப்பதற்கு சமந்தாவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வேண்டப்படக் கூடியவர் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதை சவாலாக எடுத்துக் கொண்டு செய்ததாக சமந்தா அந்த பேச்சில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட பாடலுக்கு ஆடும் போது அல்லு அர்ஜுன் பெரியளவில் உதவியாக இருந்தார். அவரது உதவியில்லாமல் போனால், என்னால் எதுவும் செய்ய முடியாமல் போயிருக்கும் என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
 - cini express.jpg)