பிரபல தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்யும் சமந்தா..? வைரலாகும் பத்திரிக்கை..!!

நடிகை சமந்தா பிரபல தயாரிப்பாளரின் மகனை இரண்டாவது முறையாக திருமணம் செய்யவுள்ளதாக கூறி, இணையத்தில் அழைப்பிதழின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதுகுறித்த விபரங்களை பார்க்கலாம். 
 
samantha

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா, அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். தற்போது அவர் ஹைதராபாத்தில் தனியாக வசித்து வருகிறார். தொடர்ந்து படங்களிலும் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்வது, புனித தலங்களுக்கு செல்வது போன்றவற்றில் சமந்தா கவனம் செலுத்தி வருகிறார். திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு ஆர்வங்காட்டி வருகிறார்.

தற்போது மெட்டாஸிஸ் நோய் பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சமந்தா, விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆர்ஆர்ஆர் திரைப்பட தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவின் மகன் கல்யானை அவர் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் சமந்தா மற்றும் கல்யான் பெயரிட்ட அழைப்பதிலும் இணையதளத்தில் வைரலாகின. இந்நிலையில் தயாரிப்பாளரின் மகன் கல்யாண் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். அந்த படத்துக்கு ஆதிரா என்று பெயரிட்டுள்ளனர்

அதற்கான அறிமுக விழாவின் போது அச்சடிக்கப்பட்ட அழைப்பதில் தான் அது. அதை தவறாக புரிந்துகொண்டு சமந்தா மற்றும் கல்யானுக்கு திருமணம் என்று வதந்தி பரவியுள்ளது.

From Around the web