விவகாரத்து விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடும் சமந்தா..!

 
சமந்தா

தொடர்ந்து வெளியாகி வந்த விவகாரத்து செய்திகளால் சமந்தா மனவேதனை அடைந்திருப்பதாகவும், அதனால் அவர் நீதிமன்றத்தை நாடபோவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டு ஹைதராபாத்தில் செட்டிலானார் சமந்தா. தன்னுடைய பெயரில் கணவர் வீட்டு பெயரான ’அக்கினேனி’ என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாவிலுள்ள தனது பெயரில் இருந்து அக்கினேனி என்பதை நீக்கிவிட்டு, தன்னுடைய பெயரையும் அழித்துவிட்டு வெறும் எஸ் என்று அவர் வைத்துக் கொண்டார்.

அதை தொடர்ந்து நாக சைத்தன்யா - சமந்தா இடையே விவகாரத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. இருவரும் ஹைதராபாத்தில் தனித்தனியாக வசித்து வருவதாகவும், நாகர்ஜூனா எவ்வளவு முயன்றும் இருவரையும் சேர்த்துவைக்க முடியவில்லை என்று கூறப்பட்டது.

சமீபத்தில்ல்  நாக சைத்தன்யா நடித்துள்ள லவ் ஸ்டோரி பட ப்ரோமோஷன்கள் துவங்கின. இந்த நிகழ்வுகள் எதற்கும் சமந்தா வரவில்லை. ஹைதராபாத்தில் சிரஞ்சீவி கலந்துகொண்ட பட அறிமுக விழா நடைபெற்றது. அதற்கும் சமந்தா வரவில்லை. அதை தொடர்ந்து தான் இந்த விவகாரம் பூதாகரமானது.

ஆனால் இதுதொடர்பாக இருவரும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் விவகாரத்து விவகாரங்களால் மன உளைச்சல் அடைந்திருப்பதாகவும், அதற்காக ரூ. 50 கோடி கேட்டு சமந்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் இந்த அவதூறு செய்திகள் வருவது தடைபடும் என சமந்தா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 

From Around the web