தொடர் தோல்விகளுக்கு மத்தியில் ஓ.டி.டி-யை குறிவைக்கும் சமந்தா..!

 
தொடர் தோல்விகளுக்கு மத்தியில் ஓ.டி.டி-யை குறிவைக்கும் சமந்தா..!

பிரபல ஓ.டி.டி தளங்களில் முன்னணி நடிகைகள் நடித்த வலைதொடர்கள் தோல்வியை தழுவி வரும் சூழ்நிலையில், வெற்றியை குறிவைத்து சமந்தா களம் இறங்கியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் புதிய படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டன. அப்போது பல்வேறு புதிய படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியாகின. இதனால் ஒ.டி.டி பார்வையாளர்கள் அதிகரித்தனர்.

தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. ஆனால் அதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மிஸ் இந்தியா’, ‘பென்குயின்’ போன்ற படங்கள் ஓ.டி.டியில் படுதோல்வி அடைந்தன.

வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்த ‘லைவ் டெலிகாஸ்ட்’ தொடருக்கும் இதேநிலை தான். அண்மையில் தெலுங்கில் தமன்னா நடிப்பில் வெளியான ‘11த் ஹவர்’ என்கிற வலை தொடரும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற தவறியது.

ஓ.டி.டி தளங்களில் சக நடிகைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சூழ்நிலையில் வெற்றியை குறித்து சமந்தா ஒரு வலை தொடரில் நடித்து வருகிறார். ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற ‘ஃபேமிலி மேன்’ முதல் சீசனை தொடர்ந்து இரண்டவாது சீசன் தயாராகி வருகிறது.

இதற்கான எதிர்பார்ப்பு இந்தியளவில் அதிகரித்துள்ளது. இந்த புதிய சீசனில் நடிகை சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள இந்த தொடர் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறாராம் சமந்தா. இதன்மூலம் ஓ.டி.டி தளத்தில் தனக்கு வெற்றிப் பயணம் அமையும் என்பது சமந்தாவின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
 

From Around the web